நேற்று சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது, கிராமங்கள்ல தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். 2006 -2011இல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில பார்த்தீங்கன்னா… கடுமையான மின்வெட்டு. எப்ப கரண்டு வரும், எப்போ போகும்னு தெரியாது. உங்க ஊர்ல இருக்குற ஆற்காடு வீராசாமி அவர்கள் தான் மின் துறை அமைச்சரா இருந்தாரு. அப்போ இந்த மாவட்டம் பிரிக்காமல் இருந்தது, வேலூர் மாவட்டத்தில் இருந்தாரு.
அப்போ அவரிடம் நிருபர் கேக்குறாங்க… ஏங்க அடிக்கடி கரண்ட் போயிட்டு இதுக்கு என்ன பதில் சொல்லுங்கன்னு கேட்கும் போது, எங்களுடைய ஆட்சியே இந்த கரண்டால் தான் போக போகுதுனு சொன்னார். அப்படிப்பட்ட திறமைமிக்க நிர்வாகம் திமுகவிடம் இருந்தது. ஆனால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்திலே தடையில்லா மின்சாரம் மூன்று ஆண்டுகளில் வழங்குவேன் என்று சொன்னார்கள். அதை நிறைவேற்றி தந்த தலைவி புரட்சி தலைவி அம்மா.
இன்றைக்கு அதே வழியில் வந்த அம்மாவுடைய அரசும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளது. நம்முடைய தேவைக்கு போக மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம் திரு. ஸ்டாலின் அவர்களே… இதற்காக விருதுகளையும் பெற்றிருக்கிறோம். ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டுமோ,அதே போல சிறப்பாக எங்களுடைய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு இருக்கிறது. அதனால் தான் தடையில்லா மின்சாரம் கொடுப்பதனால் புதிய புதிய தொழில் தமிழகத்தை நாடி வந்து கொண்டிருக்கிறது என முதல்வர் பெருமிதம் கொண்டார்.