Categories
மாநில செய்திகள்

திரைத்துறைக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதில் திறந்தவெளியில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் PTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம். திரைப்பட தயாரிப்புக்குப் பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |