Categories
சினிமா

“திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்”… இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வெளியிட்டுள்ள பதிவு…!!!!!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.  இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆகிய இருவரும் நடித்து வருகின்றார்கள். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இயக்கியிருக்கின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் பின்னணி இசை பணி முடிவடைந்து இருக்கிறது. மேலும் இதனை இசையமைப்பாளர் சாங் சி எஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளார். மேலும் அந்த பதிப்பில் வாய்ப்பு அளித்ததற்கு புஷ்கர் காயத்ரி மற்றும் ரித்திக் ரோஷனுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படமும் என் இசையும் பிடிக்கும் என நம்புகின்றேன். திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஆர்வமாக காத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் வேதா திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |