Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீங்க”.… ப்ளீஸ்….! இந்த படத்துக்கு எதிராக பொங்கி எழ்ந்த கங்கனா….!!!

‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படத்திற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந் சதுர்வேதி, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். மேலும் இன்றைய தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பினால் உள்ள சிக்கலான முடிச்சுகளை பேசும் கெஹ்ரையான்  திரைப்படம் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் இருந்த கதையில் காதல், காமம், துரோகம், தொழில் என்று அனைத்தும் வழிந்தோடுகின்றது.

இதனால் இப்படத்திற்கு கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நானும் இந்த மில்லினியம் தலைமுறையை சேர்ந்தவர்தான். அந்தக் காதல், காமம், ரொமான்ஸை என்னால் அடையாளம் காணமுடியும். ஆனால் மில்லினியல், நியூ ஏஜ், நகர்புற காதல் போன்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள், ப்ளீஸ். மோசமான படங்களை மோசமான படங்கள் என்று தான் கூறமுடியும் உடலைக் காட்டி எத்தனை கவர்ச்சியாக எடுத்தாலும் பாலியல் கன்டென்ட் சேர்ந்தாலும் அந்த வகையான படங்களை காப்பாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |