Categories
தேசிய செய்திகள்

“திரைப்பட விளம்பரங்களில் இனி இது கட்டாயம்”…? மத்திய சான்றழிப்பு வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றிப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களின் சான்றிதழ் வகையை கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. திரைப்பட விதி 1983இல் இந்த சான்றிதழ்கள் திரைப்பட சான்றிப்பு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்படும் போது எந்த சான்றிதழ் வகையை சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றளிப்பு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. யூ சான்றிதழை தயாரிப்பாளர் விரும்பினால் விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம். மேலும் தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிட தவருபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |