சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் ஆறு திரையரங்குகளில் இன்று பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் நிலையில் திடீரென பீஸ்ட் படம் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்து இருக்கின்றனர்.
அதன்படி திரை அரங்கிற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவும், பேனர் வைக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் இன்னிசை கச்சேரி கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்திருக்கின்றனர்.
கடந்த 2ஆம் தேதி டிரைலர் வெளியானது அப்போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள பிரபல திரையரங்கு வளாகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தியும், கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் இதன் எதிரொலியாக நெல்லை மாநகரில் இன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது முந்தைய நாள் இரவே திரையரங்கில் ரசிகர்கள் கச்சேரி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். இந்த நிலையில் நெல்லை மாநகர் திரைப்பட விழா கொண்டாட்டங்களுக்கு போலீசார் வைத்துள்ளீர்கள் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.