Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திரையரங்குகளில் 100% அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது திரையரங்குகளில் 100 சதவீதம் இரு கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ரத்து செய்வதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அந்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதியை கடந்த 4ஆம் தேதி அன்று தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு என்பது எழுந்தது. ஏற்கனவே மத்திய உள்துறை செயலாளர் தலைமை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் உடனடியாக திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கடிதம் எழுதப்பட்டு இருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே பார்க்க அனுமதி என்ற அறிவிப்பது தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |