Categories
சினிமா தமிழ் சினிமா

“திரையுலகின் உயரிய விருது”…. பட்டியலில் இடம் பெறாத தமிழ் படங்கள்…. இதோ லிஸ்ட்….!!!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும் தற்போது இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த விழாவை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா எப்பொழுதும் லாஸ் ஏஞ்சலின் யூனியன் ஸ்டேஷனில் நடக்கும்.

ஆனால்  இந்த ஆண்டு ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக அகடாமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் என்ற படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் பட்டியலில் இடம்பெறாதது வருத்தத்திற்குரியது.

Categories

Tech |