மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயராம். இப்போது குணச்சித்திர வேடங்களில் தான் ஜெயராம் அதிகமாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். ஜெயராமின் மொத்த குடும்பமும் திரைத்துறையில் தான் இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெயராமின் மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார்.
அதேபோல் ஜெயராமின் மகனான காளிதாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் நடிகராக வலம் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமின்றி ஜெயராமுக்கு மாளவிகா என்ற மகளும் உள்ளார். இவரும் விரைவில் ஹீரோயினி ஆக திரையுலகில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாளவிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது..