Categories
சினிமா

“திரையுலகில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது”…. நடிகை தமன்னா ஓபன் டாக்….!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் தமன்னா. தமிழ் பட உலகின் தங்கநிறத்து அழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். அவர் பேசியதாவது, “திரையுலகில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. அதாவது பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாககூட பார்க்க மாட்டார்கள். அதேபோன்று கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

இந்த போக்கு சினிமா தோன்றியதிலிருந்தே தொடர்கிறது. அதுமட்டுமின்றி கதாநாயகிகளின் புகைப்படம் படபோஸ்டர்களில் வருவதே பெரிய விஷயம். படவிழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் கூறுவார்கள். ஆனால் கதாநாயகி வரவில்லை எனில் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்நிலைமை எப்போது மாறுமோ?” என அவர் பேசினார். கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியாகிய ஆக்‌ஷன் என்ற திரைப்படத்துக்கு பின் தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. இப்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் மட்டும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |