Categories
சினிமா விமர்சனம்

திரையுலகேமே அதிர்ச்சி….! “குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை கைது”…. போலீசார் அதிரடி….!!!

நடிகை காவியா தாப்பார் வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ். இவர் நடித்த திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்”. அதில் அவருக்கு ஜோடியாக காவியா தாப்பார் நடித்திருந்தார். இவரை தற்பொழுது காவல்துறை கைது செய்திருக்கின்றது. இந்த நிகழ்வானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையைச் சார்ந்தவர் காவியா தாப்பார். இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பிப்ரவரி 17 மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் பார்ட்டியில் மது அருந்திவிட்டு போதையில் நள்ளிரவு ஒரு மணியளவில் காரை ஓட்டியுள்ளார். அப்போது ரோட்டின் ஓரமாக நின்ற காரின் மீது மோதியுள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையின்போது காவல்துறையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் மற்றும் விசாரணை செய்த பெண் காவலரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் இவரின் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் காவல்துறையை கடமையை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி காவியாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் தற்பொழுது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |