தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!
திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) October 25, 2021
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் ‘திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும். வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.