Categories
சினிமா

திரௌபதி முர்மு பற்றி டுவிட்டர் பதிவு…. சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம் கோபால் வர்மா….!!!!

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவரான திரைப்படம் இயக்குநர் ராம்கோபால் வர்மா, இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரௌபதி குடியரசுத் தலைவர் ஆனால் பாண்டவர்கள் யார்..? அதைவிட முக்கியம் கவுரவர்கள் யார்..? என்பதுதான் என ராம்கோபால் வர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கூடூர் நாராயணரெட்டி, ராம் கோபால் வர்மாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தன் பதிவு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ராம் கோபால் வர்மா, மகாபாரதத்தில் திரௌபதி எனக்கு அதிகம் பிடித்த கதாபாத்திரம் ஆகும். ஆனால் அப்பெயர் மிகவும் அரிதானது என்பதால், அதனுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களை நான் நினைவு கூர்ந்தேன். இதனிடையில் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ் போன்றோருக்கு இடையில் இந்தி மொழி குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிலும் ராம்கோபால் வர்மா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களின் வெற்றியைப் பார்த்து பாதுகாப்பற்றவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ளதாக ராம்கோபால் வர்மா குற்றம் சாட்டினார்.

Categories

Tech |