அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் 3-ஆவது அலை அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக கடந்த மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் நோயின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியன் அடிப்படையில் மயிலாடுதுறையிலுள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். பின்னர் பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு வெப்பமானி சோதனையும், சனிடைசர் வழங்கப்பட்டன. அதன்பின் வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கல்வி கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.