தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்தம் மற்றும் சில்லறை மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது இந்த நிறுவனம் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் வி. செந்தில் பாலாஜி என்பவர் அமைச்சராக உள்ளார். அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களில் டாஸ்மாக் ஒன்றாகும். கடந்த 2020 2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ரூ.33,811.14 கோடி மாநில அரசு ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் டாஸ்மாக் கடையில் விற்பனை அதிகரிக்கும்.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு மறுநாள் பல்வேறு தனியார் நிறுவனங்கள் விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகின்றனர். இதனால் மது பிரியர்கள் அனைவரும் அதிக மது பாட்டிலை வாங்கி செல்வார்கள். இதுகுறித்து டாஸ்மாக் தரப்பில் தெரிவித்த தகவலின்படி, தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.200 கோடி மற்றும் தீபாவளியன்று ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ரூ.1000 கோடி மது விற்பனையாகும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் விற்பனை நடைபெறும். கடந்த ஆண்டு தீபாவளி அன்று கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த நிலையில் ரூ.465 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு முன்னேற்றம் கண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளனர். இதையடுத்து கடந்த ஆறு மாத காலமாக டாஸ்மாக் கடையை பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு இழப்பு ஏற்பட்டதால் டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டுள்ளது.