Categories
தேசிய செய்திகள்

திறக்கப்பட்ட முதல் நாளே பாபா கோயில் ஹவுஸ்ஃபுல்…. மகிழ்ச்சியில் கோயில் நிர்வாகம்….!!

சீரடி சாய்பாபா கோயில் திறக்கப்பட்ட முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா நெருக்கடி காரணமாக பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நேற்று முதல் சீரடி கோயில் திறக்கப்படும் என ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன்டிரஸ்ட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஒரு மணி நேரத்திற்கு 1, 150 பேர் வீதம் மொத்தம் 15 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலின் முன்பகுதியில் பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி, கிருமிநாசினிகள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக ஸ்ரீ சாய் பாபா சன்ஸ்தன் டிரஸ்ட் அதிகாரிகளுடன் அகமத் நகர் ஆட்சியர் ராஜேந்திர போசலே சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். மேலும்  ஒரு மணி நேரத்திற்கு 900 பக்தர்கள் வீதம் முதல் நாளில் மட்டும் 11 ஆயிரம் பக்தர்கள் சீரடியில் பாபாவை தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறுகையில்: பக்தர்களுக்கு பிரசாதமான திருநீரு பாக்கெட்டுகளில் வழங்கப்படுவதாகவும், லட்டு பிரசாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாபாவிற்கு பூக்களை அளிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை மண்டபமும் செயல் படவில்லை என கூறினார்கள்.   முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்ட பின்னர் அனைத்தும் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்கள்.

Categories

Tech |