Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வீட்டின் கதவுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின்‌ பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கண்ணி கூட் ரோடு பகுதியில் ஜோஸ் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜோஸ் ஸ்டாலினின் வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஜோஸ் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஜோஸ் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 1/4 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஜோஸ் ஸ்டாலின் மூங்கில்துறைப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |