Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வேன் கதவு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வடகுடி பகுதியில் அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வேன் டிரைவர் கதவை திறந்தவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதன் மீது மோதி கீழே விழுந்துவிட்டார்.

இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |