Categories
அரசியல்

திறனற்ற தி.மு.க அரசு… ஆவினுக்கு மூடுவிழா நடத்த திட்டமா…? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்…!!!!!!!

கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க அரசு ஆவின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால் கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளதா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் ஆவின் ஆரஞ்சு கலர்  பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து அண்ணாமலை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் “ஆளும் தி.மு.க அரசு கலர் கலரான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளை கலர் கலராக வேறுபடுத்தி கண்டபடி விலையை உயர்த்தி மக்களை துன்பப்படுத்துகிறது.

இந்த அராஜக தி.மு.க ஆட்சியை கண்டித்து வருகிற 15-ம் தேதி தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பெருந்திரளாக தமிழகத்தின் சுமார் 1,200 ஒன்றியங்களில் கலந்து கொள்கின்றனர். அந்த பகுதியில் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |