Categories
தேசிய செய்திகள்

திறனை, அறிவை வளர்க்கும்…. எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க…. மோடி பேச்சு

புதிய கல்விக் கொள்கைக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தக்கூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கத்திலும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனால் புதிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதிலும் காணொலிக் காட்சி மூலமாக மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு சில தினங்களுக்கு முன்னர் ஒரு மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கவர்னர்கள் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டிற்கு ‘ உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக தனது முதல் உரையை தொடங்கினார். அதில் அவர் கூறும்போது, ” புதிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதே சமயத்தில் அரசின் பங்களிப்பு கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்விக் கொள்கையில் பங்குள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரும் தங்களது கல்விக் கொள்கையாக கருதுகின்றனர்.

இந்தக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மாநிலங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நான் மேலும் முன்னேறி செல்ல வேண்டும். கல்விக் கொள்கை குறித்த விவாதங்கள் அனைத்தும் முக்கிய மானவை. இந்தக் கொள்கையில் பங்கெடுத்து உள்ள ஆசிரியர்கள் அனைவரும் முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் திறன் மற்றும் அறிவை கட்டாயம் வளர்க்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |