திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத தொழிற் பயிற்சி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தை சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்பொழுது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து செயல்பட்டு வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடகை கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு தொழில் பயிற்சி நிலையத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.