இட ஒதுக்கீடு குறித்த பதிவு ஒன்றை MP கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த உயர்சாதி பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் இட ஒதுக்கீட்டால் திறமைக்கு மதிப்பு இல்லை என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு தக்க பதிலடியை கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அளித்துள்ளார்.
அதில், ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் ) தலித் , பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எடுத்த மதிப்பெண்களை விட, குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிட்டு, சமூக இட ஒதுக்கீடு என்பது திறமைக்கு தரப்படும் நியாயமான அங்கீகாரம் என பதிவிட்டுள்ளார்.