Categories
தேசிய செய்திகள்

திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில்…. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி…!!!

இந்தியாவின் பிரதமராக  2014 அம வருடம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். இதனை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமராக 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 14ஆவது பிரதமர் ஆவார். இவர் தலைமையிலான அரசு இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றி வருகிறது என்றும் ஏழ்மையை ஒழித்து வருகிறது என்றும் முன்னணி சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மாநில அரசுகளுக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்கன் டேட்டா இன்டலிஜன்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களின் திறமைவாய்ந்தவர்களுடைய பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 66 சதவீதம் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இத்தாலிய பிரதமர் மரியோ (65% ) இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆபரேடர்(63%), மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காவது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஐந்தாவது ஜெர்மன் அதிபர் அங்கோலா பிடித்துள்ளார்.

Categories

Tech |