தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், சொல்ல மறந்த கதை மற்றும் அழகி போன்ற திரைப்படங்களில் மூலம் இயக்குனராகவும் வெற்றிக் கண்டுள்ளார். இவர் தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மனிதர்களின் பல்வேறு விதமான உணர்வுகள், உணர்ச்சி ததும்பல்கள், உறவுகளின் சிக்கல் போன்றவற்றை மையப்படுத்தி படம் இருக்கும். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால், எல்லோருமே மாட்டிக்கொள்வோம். இந்த படத்தை வீரசக்தி தயாரிக்கிறார்.
இவர் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், யோகி பாபு, கௌதமேனன், பாரதிராஜா போன்ற அசத்தலான நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் இயக்குனர் பாரதிராஜா தங்கர் உன் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று சொல்வார். ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு நடிக்கும் யோகி பாபு நான் கதை கூறிய உடனே ஐயா வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தை கௌதமேனன் செய்துள்ளார். நான் எஸ்ஏ சந்திரசேகரிடம் கதை கூறிய போது எப்ப சூட்டிங் என்று கேட்டார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். என்னுடைய படத்தில் லெனின் வெகு நாட்களுக்கு பிறகு எடிட் செய்கிறார் என்றார்.