Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்புக்கு சென்ற குடும்பத்தினர்…. பள்ளத்தில் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு பகுதிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொகுசு காரில் திற்பரப்புக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருவிக்கு செல்லும் நுழைவாயில் அருகே அந்த குடும்பத்தினர் இறங்கி விட்டதால் டிரைவர் மட்டும் காரை நிறுத்துவதற்காக ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது இட நெருக்கடி காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது டிரைவர் கார் கதவை திறந்து வெளியே குதித்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதனையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து காரை மீட்டனர். மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்க போதிய இட வசதி ஏற்படுத்தி தருமாறு பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |