சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு சென்று அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளு குளுவென சீசன் நிலவியது. இதனை அடுத்து தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.