கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிபாறை ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.