திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு தினம்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அங்கு “குளு குளு” சீசன் நிலவுகிறது.
இதனால் நேற்று தீற்பரப்பு அருவிக்கு கன்னியாகுமரி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து அவர்கள் உற்சாகத்துடன் அறிவியல் குளித்து மகிழ்ந்தனர். இந்த திற்பரப்பு தடுப்பணையை ஒட்டி அலங்கார இசை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.