தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் சர்வதேச காவல்துறையிடமிருந்து சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்திருக்கும் இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் பற்றி சிபிஐ தகவல்களை சேகரித்துத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவம்பா் 23ம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. அதன்பின் சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிள் பிரிவு பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் இ-ஹாஸ்பிடல் அமைப்பு இணைய முறையில் கொண்டுவரப்பட்டது..