இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார தாக்கங்கள் காரணமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறைந்து விட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சியானது 9.8 சதவீதமாக இருக்கிறது.
இருந்தாலும் கடன் வளர்ச்சி 14.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையானது தொடர்ந்து வந்தால் வங்கிகள் திவாலாகும் நிலை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே இதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.