Categories
தேசிய செய்திகள்

திவால் சட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் கோடி வசூல் – பாஜக அமைச்சர் பெருமிதம்

 பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திவால் சட்டம் மூலம் இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.ஏ.ஐ அமைப்பின் 70ஆவது ஆண்டுவிழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைத்தப்பின், வங்கியில் உள்ள வாரக்கடன் சிக்கலை தீர்க்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக திவால் சட்டம் என்ற ஐ.பி.சி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. அதன் விளைவாக கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் வாரக்கடன் திவால் சட்டம் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தீவிரமாக தொடரும்பட்சத்தில் வாரக்கடன் சிக்கல் விரைவில் தீரும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், மோடி அரசின் கனவு திட்டமான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அடைவது நிச்சயம் எனவும், இதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அனுராக் தாக்கூர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

Categories

Tech |