இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கை நாட்டு மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகின்றது. இதனால் கொதித்து போயிருக்கும் இலங்கை மக்கள் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் ஒன்று திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அதே சமயத்தில் அங்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளது.
இலங்கையின் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி வருக்கின்றது. இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகியுள்ளார். இவருடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜினாமா செய்த தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையில் 8-வது அதிபதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா கூறியுள்ளார். இலங்கை மக்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.