Categories
உலக செய்திகள்

திவீரமாகும் கொரோனா.. குறுகிய கால கடுமையான ஊரடங்கு.. அதிபரின் முடிவு என்ன..?

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறுகிய கால பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜெர்மனியில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாட்டில் சிறிய காலத்திற்கு கடும் விதிமுறைகளுடன் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதற்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் ஆதரித்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையை குறைக்க முடியாமல் திண்டாடி வருவதால் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் சிறிய காலத்திற்கு கடும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில்  அரசாங்கத்தின் துணை செய்தி தொடர்பாளர் Ulrike Demmer கூறியுள்ளதாவது, நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துகொண்டே வருகின்றனர்.

எனவே சிறிய கால கடுமையான பொது முடக்கத்திற்கு ஒவ்வொருவரும் ஆதரிப்பது சரியானது என்று தெரிவித்துள்ளார். மேலும் பிராந்தியத்தை விட நாடு முழுவதுமான கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |