காஷ்மீரில் 1990 ஆம் வருடங்களில் இந்து மதத்தினரை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தது. அதாவது இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று பயங்கரவாதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோன்று காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒலிப்பெருக்கு வாயிலாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இதையடுத்து காஷ்மீரிலிருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டுவெளியேறி நாட்டின் பல இடங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்த னர்.
இதனிடையில் காஷ்மீரில் 1990-களில் நடந்த தாக்குதல்கள் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப் படத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை திரையிடுவதன் வாயிலாக சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் முறையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாவட்டத்தில் எந்த இடத்திலும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த அமைப்பும் எந்தக் கூட்டங்களையும் நடத்தக்கூடாது என்றும் மாவட்டத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இன்று (மார்ச்22) முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று கோட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.