‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பிரபல பாடகியின் கணவர் நடிக்கவுள்ளார்.
மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற ஒரு நடுத்தரவர்க்க பெண் திருமணத்திற்குப் பின் தனது கனவுகளை நனவாக்குகிறாளா? இல்லையா? அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதே இந்த படத்தின் கதை . மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபல பின்னணி பாடகி சின்மயின் கணவர் ஆவார். மேலும் இவர் மாஸ்கோவின் காவிரி, வணக்கம் சென்னை, யூ-டர்ன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.