நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இவர் இத்திரைப்படத்திற்காக 5 லட்ச அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றிருக்கிறார். இதன் இந்திய மதிப்பு நான்கு கோடி ரூபாய் ஆகும். இவர் தமிழ் படங்களில் நடிக்க ரூபாய் 15 கோடி சம்பளமாக வாங்குகின்ற நிலையில் ஹாலிவுட் படத்திற்கு மிகக் குறைந்த சம்பளமே வாங்கி இருக்கின்றார். இவர் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதற்காகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதாலும் குறைந்த சம்பளத்தில் நடித்ததாக கூறப்படுகின்றது.