தி கிரே மேன் 2 ஆம் பாகத்தில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இத்திரைப்படம் சென்ற ஜூலை 22ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் தனுசுக்கு சில நிமிட காட்சிகள் மட்டுமே இருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து ரூஸோ சகோதரர்கள் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்தார்கள். மேலும் படத்தில் தனுசுக்கு தனி கதை இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இந்த நிலையில் நடிகர் தனுஷ் அதனை உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, தி கிரேமன் யுனிவர்சல் எக்ஸ்பேண்ட் ஆகின்றது. இரண்டாம் பாகம் வருகின்றது என குறிப்பிட்டு இருக்கின்றார்.
The Gray Man universe is expanding and the sequel is coming… Lone Wolf is ready, are you? #TheGrayMan @agbofilms @netflix @Russo_Brothers pic.twitter.com/b8FuJk9koJ
— Dhanush (@dhanushkraja) August 6, 2022