Categories
தேசிய செய்திகள்

தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

புனேவை சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தினுடைய உரிமத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது ரத்துசெய்து இருக்கிறது.

வங்கியில் கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதன் எதிரொலியாக நேற்று முதல் தி சேவாவிகாஸ் கூட்டுறவு வங்கி தன் வணிகத்தை நிறுத்துகிறது. வங்கி சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில், டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து (டிஐசிஜிசி) 99 % டெபாசிட்தாரர்கள் தங்களது முழுடெபாசிட் தொகையையும் பெற உரிமை உண்டு.

செப்டம்பர் 14ம் தேதி வரை மொத்த காப்பீடு டெபாசிட்களில் ரூபாய்.152.36 கோடியை டிஐசிஜிசி செலுத்தி இருக்கிறது. கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் வங்கியின் உரிமத்தை ரத்துசெய்வதாக ரிசர்வ்வங்கி தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |