தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராயநகரில் புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரத்திற்கு குறைவாகவே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் தியாகராய நகரில் குவிந்தனர். கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திணறினார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் தற்போது புத்தாடைகள் வாங்குவதற்காக வெளியே செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.