Categories
அரசியல்

தி.மு.க அரசின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்க முடியாது…. பா.ஜ.க நாராயணன் திருப்பதி எச்சரிக்கை….!!!

மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக ஆதீனத்தை தி.மு.க அரசு முரசொலி நாளிதழ் மூலம் மிரட்டியுள்ளது.

இதனையடுத்து தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மதுரை ஆதினத்தின் சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார்கள் என்ற உண்மையை ஆதினம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. இந்நிலையில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள், வன்முறையைத் தூண்டுபவர்கள், சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள், மதவெறி பேச்சுகள் போன்றவற்றையும் மதுரை ஆதீனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் யூ டூ ப்ரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் சிவபெருமானை இழிவுபடுத்தி பேசியவர்களை கைது செய்ய தி.மு.க அரசுக்கு துணிவில்லை. அதன்பிறகு மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணியின் போது கிருஷ்ண பகவானை அவதூறாக பேசியவர்கள், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஒழிப்பேன் என்று பொது இடத்தில் அவதூறாக பேசிய அமைச்சர் அன்பரசனை  கைது செய்யத் துணிவு இல்லாத தி.மு.க, அண்ணாமலையின் கைகளை வெட்டுவேன் என்று கூறிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜனை கைது செய்யாத தி.மு.க, இந்து மதத்தை ஒழிப்பேன் என்று மேடைதோறும் பேசும் திருமாவளவனை அடக்க முடியாத தி.மு.க அரசு மதுரை ஆதீனத்தை மிரட்டுவது கோழைத்தனமானது ஆகும்.

இதைத்தொடர்ந்து சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை குறிப்பிட்டு, சாது கொதித்து எழுந்தால் அரசு தாங்காது என்ற வாசகத்தையும் பதிவிட்டிருந்தார். இதை சுருக்கமாக சொன்னால் முரசொலியில் குறிப்பிட்டது போல தி.மு.க அரசு எல்லை மீறி சென்று கொண்டிருந்தால், பா.ஜ.க அரசு பார்த்துவிட்டு பொறுமையாக இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க, இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க, வன்முறையை தூண்டும் விதமாக பேசும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க, ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கும் தி.மு.க அரசை இனியும் பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை தி.மு.க அரசு புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |