தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு கூடிய விரைவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 25,000 இளைஞர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பகவத்சிங் சன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இதேப்போன்று தமிழ்நாட்டிலும் குறைந்தது 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதைத்தொடர்ந்து 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது.
இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு 5.60 லட்சம் கோடி கடன் உள்ளது எனவும், பஞ்சாப் அரசுக்கு 3 கோடி கடன் இருப்பதாகவும் கூறினார். மேலும் பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது பஞ்சாப்பை விட தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவில் கடன் தொகை உள்ளது. இருப்பினும் பஞ்சாப் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இதேப்போன்று தமிழக அரசும் குறைந்தது 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.