Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தி.மு.க அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை”… சேலம் மாநகரில் 4 இடங்களில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்…!!!!!!

மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்து சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி  உயர்வு, விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்தும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பபெற வலியுறுத்தியும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சூரமங்கலம் பகுதி செயலாளர் மாரியப்பன், பாலு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர்.

மேலும் அவை தலைவர் பன்னீர்செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே செல்வராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இதில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஜி.வெங்கடேசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் தி.மு.க அரசு இதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சேலம் மாவட்டத்திற்கு ரூ.380 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார். இதேபோல் அஸ்தம்பட்டி போக்குவரத்து கழக பணிமனை அருகே, அம்மாபேட்டை ரவுண்டனா அருகே, தாதகாப்பட்டி கேட் அருகே போன்ற இடங்களிலும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |