Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்… தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில்… தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!!

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் இன்று முதல் நாள் போராட்டம் நடத்தி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக தலைமையில், கூட்டணி கட்சிகள் அனைவரும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image

மதிமுக தலைவர் வைகோ தன்னுடைய அண்ணாநகர் இல்லம் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்.. அவருடன் மாவட்ட செயலாளர்கள் குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

மத்திய அரசு தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, விலைவாசி உயர்வை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |