மதுரையில் தி.மு.க கட்சியின் தொண்டரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியில் தி.மு.க கட்சியின் தொண்டரான ரமேஷ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் இவரது வீட்டிற்குஅருகே சென்றது. இந்நிலையில் இவரது வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை வீசியதால் இல்லத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
அதன்பின் ரமேஷ் பாண்டி சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் ரமேஷ் பாண்டி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.