Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை…. பயங்கர சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உடையானம் பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராக்கம்மாள், தற்போது தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது மனைவி சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என மூர்த்தி நினைத்துள்ளார்.

இந்நிலையில் ராக்கம்மாளின் வீட்டிற்குள் புகுந்த மூர்த்தி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தப்பித்து சென்ற ராக்கம்மாளை மூர்த்தி ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் கிடந்த ராக்கம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |