அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார்.
அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார்.
முதல்வர் குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறனுக்கு ஏன் துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கவில்லை. அவரை வெறும் விளையாட்டு மேம்பாட்டுப்பிரிவு செயலாளராக அறிவித்து உள்ளனர். இதற்கிடையில் முரசொலி மாறன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர்” என அவர் சாடினார்.