Categories
சினிமா

“தி லெஜண்ட்” திரைப்படம்…. புது பாடலை வெளியிட்ட படக்குழு…. வைரல்….!!!!

லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். இந்த படத்தின் வாயிலாக ஊர்வசிரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள போ…போ… என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் கே.கே பிரசாத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |