Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தி வாரியர்” திரைப்படத்தில் சிம்பு பாடிய “புல்லட் பாடல்”… வெளியாகி வைரல்…!!!

தி வாரியர் திரைப்படத்தில் சிம்பு பாடிய பாடல் வைரல் ஆகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகின்றார். படத்திற்கு ஹீரோவாக ராம் பொத்தினேனி நடிக்க ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.

வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி இத்திரைப்படமானது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில் நாசர், ஆதி, நதியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைகின்றார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடி இருக்கின்றார். தற்போது புல்லட் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

Categories

Tech |