மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகத்தாய் கால் தவறி கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீக்காயங்களுடன் மூதாட்டி தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் சண்முகத்தாய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.