டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெக்சான் வகை மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மும்பையில் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்ஸான் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தீ பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விசாரணை டாடா நிறுவனம் முன்பே தொடங்கிவிட்டது. இந்த காரானது 2 மாதத்திற்கு முன்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கடும் வெப்பமோ, மழையோ அல்லது வேறு எந்த இடர் ஏற்படுத்துகின்ற பருவகால சூழ்நிலையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.